பெட்ரோல் குண்டு வீசுவோருக்கு இதான் தண்டனை... எச்சரிக்கை விடுத்த தென் மண்டல ஐஜி!!

By Narendran SFirst Published Sep 25, 2022, 6:22 PM IST
Highlights

பெட்ரோல் குண்டு வீசுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெட்ரோல் குண்டு வீசுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை சர்வேயர் காலனி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திண்டுக்கல் மாவட்டம் குடைப் பாறைபட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பால்ராஜ் என்பவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு மர்ம கும்மல் பெட்ரோல் குண்டு வீசியதில் ஒரு கார், 5 டூவீலர் எரிந்தது.

இதையும் படிங்க: சட்டவிரோத காவலில் வைக்கப்பட்ட 2 பெண்கள்... ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்!!

இந்த சம்பவம் தொடர்பாக பேகம்பூரை சேர்ந்த சிக்கந்தர் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தென் மாவட்டத்தில்  20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தேவைப்பட்டால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்.

இதையும் படிங்க: கண் தானம் பற்றிய விழிப்புணர்வு… ஆவடியில் மக்கள் வரவேற்பை பெற்ற திருமணம்!!

தென் மாவட்டத்தில் திண்டுக்கல், ராமநாதபுரம் இரண்டு இடங்களில்   பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் வீடுகள், கடைகள், அலுவலகங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல் பங்குகளில்  பாட்டில்களில் பெட்ரோல் விநியோகம் செய்ய வேண்டாம் என அறிவுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

click me!