ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை - பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம்...

Asianet News Tamil  
Published : Jun 04, 2018, 09:56 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை - பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம்...

சுருக்கம்

Action against those who attacked Adi Dravidaan community - demonstration by Bahujan Samaj Party ...

விழுப்புரம்

ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி  விழுப்புரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஸ்டீபன்ராஜ் கண்டன உரையாற்றினார்.

"சிவகங்கை மாவட்டம், கச்சநத்தம் கிராமத்தில் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், 

தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.20 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் கோவிந்தசாமி, பொருளாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்,. ஆர்ப்பாட்டம் முடிந்தபின்பு  அவர்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

எமிஸ் தளத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் பயன்கள் என்னென்ன?
ஸ்டாலின் அவர்கள் இப்போது புதுச்சேரியில் கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளார்! எடப்பாடி பழனிசாமி பேச்சு