
Omni bus fare hike tamil nadu : தமிழகத்தில் காலாண்டு விடுமுறை மட்டுமில்லாமல் ஆயூத பூஜை மற்றும் விஜயதசமியையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பூஜை விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாட பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யவுள்ளனர். அதே நேரம் கடைசி நேரத்தில் வெளியூர் பயணம் செல்ல திட்டமிட்டவர்களுக்கு ரயில்களில் இடம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஆம்னி பேருந்துகளில் கட்டணமானது பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆயிரம் ரூபாய் எப்போதும் வசூலிக்கப்படும் கட்டணம் 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு (01.10.2025 முதல் 05.10.2025 வரை) பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள்,
மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்குப்புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.