தமிழகத்தில் கோயில்கள், கடல்கள், வனவிலங்கு சரணாலயங்கள் போன்ற சுற்றுலாத் தளங்கள் ஏராளமாக உள்ளன. 2023 ஆம் ஆண்டில் 28.71 கோடி சுற்றுலாப் பயணிகள் தமிழகம் வந்துள்ளனர்,
தமிழகத்தை தேடி வரும் சுற்றுலா பயணிகள்
தமிழகத்தில் இயற்கையை சார்ந்த இடங்களும், கோயில்களும், கடல்களும் என ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளது. இந்த இடங்களை பார்ப்பதற்காக இந்தியாவில் இருந்து மட்டுமல் வெளிநாட்டில் இருந்தும் கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகள் தமிழகம் வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தை கடந்த ஓராண்டில் வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
undefined
தமிழ்நாடு 43,283-க்கும் மேற்பட்ட பழமையான கோவில்களைக் கொண்டிருக்கிறது. 1,076 கி.மீ. நீளமுள்ள நீண்ட கடற்கரை. 18 வனவிலங்கு சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்கள். 17 பறவைகள் சரணாலயங்கள், 5 புலிகள் காப்பகங்கள். யுனஸ்கோவால் உலக பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட 6 தலங்கள் உள்ளிட்ட உலகோரை கவரக்கூடிய பல்வேறு சுற்றுலாத்தளங்களைத் தன்னகத்தே கொண்டு தனிச்சிறப்போடு விளங்குகிறது.
கோயில்களும் இயற்கை வளங்களும்
தொன்மையும் வளமும் கொண்டு திகழ்கின்ற தமிழ்நாட்டின் சுற்றுலாத் தளங்கள் உலக முழுவதும் கவனம் பெறுகின்ற வகையில் சுற்றுலா வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டை இந்தியாவின் சுற்றுலாத் தலைநகரமாக மாற்ற உதவும் 'தமிழ்நாடு சுற்றுலா கொள்கை-2023' ஐ வெளியிட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாவின் பங்களிப்பை 12% ஆக உயர்த்துதல். தமிழகத்தில் சுற்றுலா மற்றும் அதனைச் சார்ந்துள்ள தொழில்களில் 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனும் உயரிய குறிக்கோளுடன் சுற்றுலாக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அதன் மூலம் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பு வசதிகளை உயர்த்துதல், சுற்றுலா வளர்ச்சி மாநாடுகளை நடத்துதல் பங்கேற்றல், முதலீடுகளை ஈர்த்தல், கலைத் திருவிழாக்களை நடத்துதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனோ பெருந்தொற்றில் உலக அளவில் சுற்றுலாத்துறைப் பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த வீழ்ச்சியிலிருந்து மீள கடுமையான முயற்சிகளை உலக நாடுகள் எடுத்துக்கொண்டிருக்கும் சூழலில் முதலமைச்சரின் கவனம் மிக்க செயல்பாடுகளால் தமிழ்நாடு சுற்றுலாத்துறை புத்துயிர்பெற்று வருகிறது.
ஒரே ஆண்டும் 28 கோடி சுற்றுலா பயணிகள்
2020 ஆம் ஆண்டு 14.18 கோடியாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையை 2023 ஆண்டில் 28.71 கோடியாக உயர்த்தி திராவிட மாடல் அரசு சாதனைப் படைத்திருக்கிறது. மேலும் பலகோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. முதலமைச்சரின் வழிகாட்டலின் கீழ் தமிழ்நாடு சுற்றுலா துறை பல்வேறு பன்னாட்டு, தேசிய விருதுகளை வாங்கி குவித்துள்ளதாக தெரிவித்துளார்.