திருச்சி அருகே  பயங்கர விபத்து…..  திருப்பதி சென்ற வேன் மீது லாரி மோதியதில் 10 பேர்  பலி…..

 
Published : Dec 07, 2017, 08:04 AM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
திருச்சி அருகே  பயங்கர விபத்து…..  திருப்பதி சென்ற வேன் மீது லாரி மோதியதில் 10 பேர்  பலி…..

சுருக்கம்

accident near manapparai... 10 dead

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே லாரியும்- வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 10 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாகர்கோவிலில் இருந்து 15 க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் திருப்பதிக்கு நேற்று மாலை புறப்பட்டுச் சென்றனர். அந்த வேன் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் வேன் அப்பளம்போல் நொறுங்கியது. வேனில் இருந்த 4 ஆண்கள், 3 பெண்கள், 3 குழந்தைகள்  என  10பேர் உயிரிழந்தனர்.தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்   திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!