
சென்னை கிண்டியில் கல்லூரி மாணவிகள் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது கிண்டி மேம்பாலத்தை கடக்க முயன்றபோது. எதிரே அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி மாணவிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயத்ரி, சித்ரா, ஆயிஷா ஆகிய 3மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த 3 மாணவிகள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துiறியனர் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செல்லமாள் கல்லூரி வாயில் முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.