கடந்த சில மாதங்களாகவே ஆருத்ரா நிறுவனம் சார்ந்த பலரை போலீசார் தொடர்ந்து கைது செய்தும், விசாரித்தும் வருகின்றனர்.
சென்னை ஆருத்ரா நிதி மோசடி வழக்கு தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள் உள்ளாக்கியது. இந்த மோசடியில் பொதுமக்களிடமிருந்து சுமார் 13 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே இந்த நிறுவனம் சார்ந்த பலரை போலீசார் தொடர்ந்து கைது செய்தும், விசாரித்தும் வருகின்றனர். இந்நிலையில் இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய பிரபல நடிகரும் பாஜக பிரமுகருமான ஆர்.கே சுரேஷை கடந்த இரண்டு மாத காலமாக சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
மகளிர் உரிமைத்தொகைக்கான கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை
துபாய் நாட்டில் இவர் இருப்பதாகவும், கடந்த ஐந்து மாதங்களாக இந்தியா பக்கம் இவர் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. பரபரப்பாக இந்த வழக்கு சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நாகப் பாம்பின் படத்தை பதிவிட்டு ஒரு ட்வீட் ஒன்றை ஆர்கே சுரேஷ் போட்டுள்ளார்.
ஆனால் அந்த பதிவை போட்ட பத்து நிமிடங்களுக்குள் அந்த பதிவை அழித்துள்ளார். இந்நிலையில் அவர் ட்வீட் போட்ட IP தகவல்களை கொண்டு அவர் எந்த இடத்தில் இருக்கின்றார் என்பதை ஆய்வு செய்து வருகின்றனர் சைபர் கிரைம் போலீசார்.
நேரில் வந்த கருணாநிதி.. நெகிழ்ந்த மு.க ஸ்டாலின் - கண்கலங்கிய திமுக உடன்பிறப்புகள்