மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க 15 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு

By Velmurugan sFirst Published Jan 31, 2023, 2:04 PM IST
Highlights

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமழிக அரசு சார்பில் வீடு, விவசாயம், கைத்தறி, விசைத்தறி உள்ளிட்டவற்றுக்கு மானிய அடிப்படையில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். இதற்கான காலக்கெடு ஏற்கனவே டிசம்பர் இறுதியில் நீட்டிப்பு செய்யப்பட்டு ஜனவரி 31ம் தேதிக்குள் அனைவரும் தங்கள் ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய மு.க.அழகிரி

ஆனால், தற்போது வரை இணைப்பு மேற்கொள்ளாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் காலக்கெடு மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் தனது பெயரில் 4 அல்லது 5 வீடுகள் வைத்திருக்கும் பட்சத்தில் ஒரு வீட்டுக்கு மட்டுமே மானிய மின்சாரம் கிடைக்கும், மற்ற வீடுகளுக்கான மின்சார மானியம் தடைபடுமோ என்ற அச்சத்தில் பலரும் இந்த இணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் உள்ளனர்.

சிறப்பு பூஜைகளுடன் தொடங்கிய ஓமலூர், சேலம் விரைவு ரயில் சோதனை ஓட்டம்

இருப்பினும், ஒருவர் எத்தனை வீடுகள் வைத்திருந்தாலும் அனைத்து வீட்டுக்கும் மானிய அடிப்படையிலேயே மின்சார விநியோகம் செய்யப்படும் என்று அரசு ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், ஆதார் எண்ணுடன், மின் இணைப்பு எண்ணை இணைப்பதற்கு பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படடுவதாக மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

click me!