போதையில் குத்தாட்டம் போட்டதில் சண்டை! 2 வருஷத்துக்கு முன் கல்யாண விழாவில் அசிங்கபடுத்தியதால் வாலிபரை கதறக் கதற கொன்ற கும்பல்...

 
Published : May 29, 2018, 05:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
போதையில் குத்தாட்டம் போட்டதில் சண்டை! 2 வருஷத்துக்கு முன் கல்யாண விழாவில் அசிங்கபடுத்தியதால் வாலிபரை கதறக் கதற கொன்ற கும்பல்...

சுருக்கம்

A young man murder near Chengalpattu

சரக்கு போதையில் உற்சாக குத்தாட்டம் போடும்போது, ஏற்பட்ட சண்டையால் வாலிபரை ஆறுபேர் கொண்ட கும்பல் ஒன்று கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர் அடுத்த எழில் நகர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் விமல். அதேபகுதியில் மாட்டு இறைச்சிக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி இலக்கியா. இவர்களுக்கு ஹரிணி, ஜீவிதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் தனது மனைவியுடன் விமல் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, விமலின் நண்பர் கார்த்திக் அங்கு வந்தார். பின்னர், இருவரும் வீட்டுக்கு பின்புறம் உள்ள ஒரு குளத்தின் அருகே ஒரு குட்டையில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது, அந்த இடத்திற்கு ஒரு சிறுவன் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் கிரிக்கெட் ஸ்டெம்ப், கத்தி மற்றும் உருட்டுக் கட்டையோடு வந்தனர். இதை பார்த்த விமலின் நண்பர் கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ஆக்ரோசத்துடன் வந்த அந்த கும்பல் விமலை உருட்டைக்கட்டையால் சரமாரியாக தாக்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் விமலை சரமாரியாக கத்தியால் சரமாரியாக கதறக் கதறக் குத்தினர். வலியால் துடிதுடித்து இறந்துள்ளார். தகவலறிந்த கண்ணகி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விமலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து விமலை கொலை செய்தது தெரிந்தது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: விமலுக்கும் புஷ்பராஜ் என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காரப்பாக்கத்தில் உள்ள ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர்.  அப்போது, இருவரும் போதையில் உற்சாக நடமாடியுள்ளனர். முடிவில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அப்போது, அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பினர். திருமண நிகழ்ச்சியில் அசிங்கப்படுதற்கு பழித்தீர்க்க புஷ்பராஜ் தனது நண்பர்களுடன் சென்று விமலை கொலை செய்துள்ளார்.  இதையடுத்து, கண்ணகி நகர் போலீசார் 6 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!