புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை..! சீரமைக்கும் பணி தீவிரம்.! நாளை மீண்டும் திறக்கப்படுகிறது

By Ajmal Khan  |  First Published Dec 15, 2022, 1:22 PM IST

மாண்டஸ் புயல் காரணமாக மெரினா கடற்கரையில் மாற்று திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட மரப் பலகை பாதை சேதமடைந்ததையடுத்து சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நாளை திறக்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
 


மாற்றுத்திறனாளிக்கான மரப்பாலம்

சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.  இதன்படி மெரினா கடற்கரையில் நம்ம சென்னை செல்பி பாயின்ட் பின்புறம் மணல் பரப்பில் 380 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்தப் பாதை அமைக்கப்பட்டது. கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் ரூ.1 கோடி செலவில் பாதை அமைக்கப்பட்டு, கடந்த நவம்பர் 27ம் தேதி இந்தப் பாதை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. 

Tap to resize

Latest Videos

பிளாக் ஷீப் சேனலில் மர்ம மரணம்.! தமிழகத்தில் தொடரும் கொலைகள்.!கனவு உலகில் மணல் கோட்டை கட்டும் ஸ்டாலின்- இபிஎஸ்

புயலால் சேதமடைந்த பாலம்

இந்த நிலையில், மாண்டஸ் புயல்  காரணமாக மெரினா கடற்கரையில் கடல் சீற்றம் அதிகரித்ததால் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை சேதம் அடைந்தது. இதனை அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்து இருந்தனர். ஓரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மரப்பாலம் வீணாணது என குற்றம்சாட்டியிருந்தனர். இதற்க்கு விளக்கம் அளித்த சென்னை மாநகராட்சி  சென்னை மெரினா கடற்கரை 260 மீட்டர் நீளமான கடற்கரையாகும், ஆமைகள் கடல் பரப்பிற்கு வந்து முட்டை போட்டுவிட்டு மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும்.

இதன் காரணமாக சிமெண்ட், கான்கீரிட் போன்ற நிரந்தர கட்டுமானங்களை எழுப்ப முடியாது என்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை கொண்டுதான் கட்டுமானங்களை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதன்படி அனுமதி பெற்றுதான் இந்த கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் சீர் செய்யப்படும் எனவும் மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆன்லைன் சூதாட்டத்தால் 15 நாட்களில் 5 வது உயிரிழப்பு.! ஆளுநர் ஒப்புதல் தராதது சரியில்லை.! அன்புமணி ஆவேசம்

நாளை மீண்டும் திறக்கப்படும் பாலம்

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை சீர் அமைக்கும் பணிகள் சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், முழுவதுமாக சீரமைக்கப்பட்டு நாளை மீண்டும் பாதை திறக்கப்பட உள்ளதாக சென்னை மாநகாரட்சி தெரிவித்துள்ளது. மேலும் இனிவரும் காலங்களில் இயற்கை சீற்றங்களால் கடல் பகுதியை ஒட்டி இருக்கக்கூடிய மரப்பலகை பாதிக்காமல் இருக்கக்கூடிய வகையில் அந்த மரப்பாதையானது கழட்டிக்கொண்டும் பின்னர் பொருத்தக்கூடிய வசதி அமைத்து தரப்படும் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.  

இதையும் படியுங்கள்

தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி..! 19ஆம் தேதி முதல் தமிழகத்தில் கன மழை- வானிலை மையம் எச்சரிக்கை

click me!