ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் ஊர்க்காவல்படை பெண் ஊழியர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி...

Asianet News Tamil  
Published : Apr 03, 2018, 10:38 AM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் ஊர்க்காவல்படை பெண் ஊழியர் மண்ணெண்ணெய்  ஊற்றி தீக்குளிக்க முயற்சி...

சுருக்கம்

A woman tried burn herself in collector office

தேனி 

ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த முன்னாள் ஊர்க்காவல்படை பெண் ஊழியர் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. 

தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி சுமதி (25). இவர், ஊர்க்காவல் படையில் பெண் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்தாண்டு இவர், பணியில் இருந்து விலகிக் கொண்டார். 

இந்த நிலையில் நேற்று இவர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு ஆட்சியரின் கார் நிறுத்தும் பகுதிக்கு சென்ற அவர் தற்கொலை செய்வதற்காக திடீரென தான் எடுத்து வந்த கேனில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 

அப்போது, அங்கிருந்த சிலர் அவரை தடுத்து நிறுத்தினர். உடனே அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலாளர்களும் ஓடிவந்து சுமதியை தடுத்து நிறுத்தினர்.

தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து  காவலாளர்கள் அவரிடம் கேட்டனர். அப்போது அவர், "எனக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த பிப்ரவரி மாதம் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நான் பிரசவத்துக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். 

அங்கு எனக்கு குழந்தை இறந்து பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரசவம் நடந்த இரண்டு நாட்கள் மயக்க நிலையில் இருந்த நான், மயக்கம் தெளிந்தபோது, எனது கர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ளதாக அறிந்தேன். 

கர்ப்பப்பையில் கட்டி உள்ளதாகவும் அதை அகற்ற வேண்டும் என்றும் கூறி எனது கணவரிடம் கையொப்பம் வாங்கிக் கொண்டு, கர்ப்பப்பையை அகற்றியதாக அறிந்தேன். 

கர்ப்பப்பை அகற்றப்பட்டதால் தற்போது எனது கணவரும் என்னை பிரிந்து சென்றுவிட்டார். எனவே, எனது கணவருடன் என்னை மீண்டும் சேர்த்து வைக்க வேண்டும். 

கர்ப்பப்பை அகற்றிய சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

இதனையடுத்து அவரை தேனி காவல் நிலையத்துக்கு காவலாளர்கள் அழைத்து சென்று அவருக்கு அறிவுரைகள் கூறி காவலாளர்கள் அனுப்பி வைத்தனர். 
 

PREV
click me!

Recommended Stories

210 இடங்களில் NDA கூட்டணி வெற்றி உறுதி.. திமுகவை விளாசித் தள்ளிய இபிஎஸ்.. பிரதமர் மோடிக்கு புகழாரம்!
60 ஆண்டுகால நிராசை.. தமிழகத்தில் ராகுல் ட்விஸ்ட்..! சல்லி சல்லியாக நொறுங்கும் தமிழக காங்கிரஸார்..!