கணவனை பிரிந்து வாழ்ந்த பெண்ணுக்கு... ஆசிட் வீச்சு... கோவையில் பயங்கரம்

Published : Jan 07, 2022, 01:39 PM IST
கணவனை பிரிந்து வாழ்ந்த பெண்ணுக்கு... ஆசிட் வீச்சு... கோவையில் பயங்கரம்

சுருக்கம்

கோவையில் பெண் மீது மர்மநபர்கள் ஆசிட் வீசிய நிலையில், படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

கோவை அம்மன் குளம் பகுதியை சேர்ந்த 34 வயது பெண் ராதா. தருமபுரியை சேர்ந்தவர்  ஸ்டாலின். ராதாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து ராதா தனது கணவரை பிரிந்து 8 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்துள்ளார். கோவையில் உள்ள  அம்மன் குளம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார். 

இந்நிலையில், நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய ராதா அந்தப் பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பால் வாங்குவதற்காக சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே சென்றபோது இருட்டான பகுதியில் மர்மநபர் ஒருவர் ராதாவின் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். 

இதில் ராதாவின் இடது பக்க முகம், தோள்பட்டை, இடதுகை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  இதனை பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் ராதாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். 

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் மீது ஆசிட்டை வீசி சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள். மேலும், மர்மநபமர்ம நபரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அன்புமணி..! டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு..! ஆதாரத்தை காட்டி பாமக அருள்..!
எம்ஜிஆர்., ஜெயலலிதா ஸ்டைலில் விஜய் மாபெரும் வெற்றி பெறுவார்.. செங்கோட்டையன் நம்பிக்கை