தமிழகத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது சுனாமி வேகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் தொற்று பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
சென்னையில் ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 30 மருத்துவ மாணவர்கள் உட்பட 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது சுனாமி வேகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் தொற்று பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3,759 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு இரவு ஊரடங்கு,. ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனிடையே, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அடுத்தடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
undefined
சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாணவர்கள் விடுமுறை முடிந்து கடந்த 4ம் தேதி மருத்துவமனைக்கு திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் 30 மருத்துவ மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் என 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் 25ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தொடர்ந்து டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படுவது டாக்டர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.