
தலைமை ஆசிரியர் ஒருவரை மாணவன் ஒருவன் கத்தியால் குத்தி தப்பியோடிய சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகாயமடைந்த தலைமை ஆசிரியருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பாபு இருந்து வருகிறார். இவர் வழக்கம்போல் இன்று பள்ளிக்கு வந்தார்.
அப்போது அவரது அறைக்கு ஒரு மாணவன் வேகமாக வந்தான். அப்போது அந்த மாணவனிடம் தலைமை ஆசிரியர் பாபு, என்னவென்று விசாரித்துள்ளார்.
ஆனால், அந்த மாணவனே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், தலைமை ஆசிரியர் பாபுவை குத்தியுள்ளான். இதில் பாபு ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்துள்ளார்.
இதனைப் பார்த்த ஊழியர்கள், தலைமை ஆசிரியர் பாபுவை மீட்டு, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன், தப்பியோடி விட்டார். இது தொடர்பாக திருப்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமை ஆசிரியரை மாணவன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைமை ஆசிரியர் பாபுவை கத்தியால் குத்தியவர்கள், பதினோராம் வகுப்பு மாணவன் என்பதும், கேள்வி கேட்டு திட்டியதால் மாணவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.