சென்னை கல்லூரி மாணவர் தற்கொலை ; துறைத்தலைவரே காரணம் - மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்...!

 
Published : Oct 26, 2017, 03:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
 சென்னை கல்லூரி மாணவர் தற்கொலை ; துறைத்தலைவரே காரணம் - மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்...!

சுருக்கம்

A student has committed suicide of the kavin Arts College in egmore Chennai

சென்னை எழும்பூரில் உள்ள கவின் கலை கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்ததையடுத்து, சக மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எழும்பூர் கவின் கலைக்கல்லூரியில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து அக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

வேலூர் மாவட்டம் அடுக்கும்பாறை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சென்னையில் இயங்கி வரும் அரசு கவின் கலைக் கல்லூரியில் செராமிக்  துறையில் இறுதியாண்டு படித்து வந்தார். 

இவருக்கு கல்லூரியில் துறைத்தலைவர் மூலம் மிகுந்த நெருக்கடிகள் தரப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், பிரகாஷ் சொந்த ஊரான வேலூர் சென்றிருந்தார். இதைதொடர்ந்து நேற்று இரவு பிரகாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

தகவலறிந்து வந்த போலீசார் பிரகாஷிடம் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், தனது சாவுக்கு துறைத்தலைவர் மட்டுமே காரணம் என குறிப்பிட்டிருந்தார். 

இதைதையடுத்து  கல்லூரி முதல்வர் மீதும் சம்பந்த பட்ட துறைத்தலைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!