மதுரையில் செல்போனுக்காக உயிரை விட்ட பிளஸ் 2 மாணவி..! அலறி துடிக்கும் பெற்றோர்

Published : Oct 20, 2022, 09:28 AM IST
மதுரையில் செல்போனுக்காக உயிரை விட்ட பிளஸ் 2 மாணவி..! அலறி துடிக்கும் பெற்றோர்

சுருக்கம்

பிளஸ்- 2 மாணவி பயன்படுத்தி வந்த செல்போனை பெற்றோர் பறித்ததால் விரக்தி அடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாணவர்கள் சமூக வலைதளத்திற்கு அடிமையாகி தங்களது படிப்பை மட்டுமில்லாமல், வாழ்க்கையை இழக்கும் சம்பவம் நாளுக்கு நாள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமூக வலை தளத்தில் உள்ள நல்லதை எடுத்துக்கொண்டு தீயதை தள்ளி வைக்க வேண்டும் ஆனால் அதனை புரிந்து கொள்ள முடியாத இளைய சமுதாயம் சீரழிந்து வருகின்றனர். அந்தவகையில் படிப்பில் கவனம் செலுத்தாத காரணத்தால் +2 மாணவியிடம் இருந்து செல்போனை பெற்றோர் வாங்கியதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் குதிரைசாரிகுளத்தை சேர்ந்தவர் தில்லையப்பன். இவரது மகள் முத்துபிரியா (வயது 18). திருமங்கலத்தில் உள்ள அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 

இந்தியாவையே அதிர வைத்த கேரள நரபலி.. அடுத்ததாக விருதுநகர் பெண் மாயம் - குவியும் புகார்கள் !

முத்துப்பிரியா அடிக்கடி செல்போனை பயன்படுத்தி வந்ததால் படிப்பில் நாட்டம் குறைந்துள்ளது. மேலும் காலாண்டு தேரிவிலும் மதிப்பெண் குறைந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மாணவியை கண்டித்து அவரிடமிருந்து செல்போனை வாங்கி வைத்து கொண்டனர். இதனால் வேதனை அடைந்த மாணவி செல்போன் கேட்டு கடந்த 2 நாட்களாக வீட்டில் சண்டையிட்டுள்ளார். மேலும்  கோபித்து கொண்டு சாப்பிடாமலும் இருந்துள்ளார். பெற்றோர் செல்போனை தரமறுத்ததால் மனவிரக்தியடைந்த மாணவி நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த பெற்றோர் அலறி துடித்துள்ளானர். இது தொடர்பாக திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து மாணவியின் உடலை மீட்டு அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

போலீஸ் இன்பார்மர் என நினைத்து பிரபல ரவுடி சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தினவிழா.. ஹிட்லர் உருவாகி வருகிறார்..! விஜய்யை விளாசிய அமீர்
Cylinder Price: இல்லத்தரசிகளின் தலையில் இடியை இறக்கிய LPG நிறுவனங்கள்.. சிலிண்டர் விலை ரூ.115 உயர்வு