சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்னி பேருந்தில் தீ விபத்து
தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து சென்னைக்குச் சென்ற கம்பம் டிராவல்ஸ் என்கிற ஆம்னி பேருந்து தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உத்தமபாளையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அப்போது சின்னமனூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன் என்பவர் பணி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். உத்தமபாளையம் பகுதிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கம்பம் ட்ராவல்ஸ் என்ற ஆம்னி பேருந்தின் மீது வேகமாக மோதியுள்ளது.
அலறி அடித்து ஓடிய பயணிகள்
அடுத்த ஒரு சில நிமிடங்களில் பேருந்தில் தீ பற்றி எரிய தொடங்கியது.இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறி துடித்தனர். உடனடியாக சுதாரித்த ஆம்னி பேருந்து ஓட்டுநர் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் அவசர அவசரமாக இறக்கிவிட்டார். பயணிகள் அலறியடித்து பேருந்தை விட்டு அவசர அவசரமாக இறங்கி ஓடினர். சற்று நேரத்தில் ஆம்னி பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் பேருந்தில் சென்ற அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதே நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று பேருந்தின் மீது மோதிய காவலர் ராமகிருஷ்ணனுக்கு பலத்த அடிபட்டதால் அவரால் எழுந்து செல்ல முடியாததால்,
காவலர் உயிரிழப்பு
தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த விபத்து காரணமாக தேனி- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்தில் வந்த பயணிகள் அனைவரும் மாற்று வாகனங்கள் மூலம் தங்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். பேருந்து விபத்தில் காவலர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
சென்னை அருகே இரண்டு ரவுடிகள் என்கவுண்டர் சுட்டுக்கொலை.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்..!