
செங்கல்பட்டு சாலையில் நடந்துச் சென்ற போலீஸ் மனைவியிடம் மர்ம நபர்கள் இருவர் 7 சவரன் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். காவலாளர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் இருக்கிறது. வைபவ நகஎ. இந்தப் பகுதியில் வசிக்கும் மாமல்லபுரம் துணைக் காவல் ஆய்வாளர் நெடுமாறன். இவரது மனைவி ராணி (45). நூலகப் பணியாளர்.
இவர், திங்கள்கிழமை மாலை வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்குச் சென்றுள்ளார். அப்போது, ராணியை இருசக்கர வாகனத்தில் இருவர் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
ராணி அணிந்திருந்த 7 சவரன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு அந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு கிராமிய காவல் நிலையத்தில் ராணி புகாரின் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிந்து காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு, சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக நடந்துச் செல்லும் பெண்களிடம் சங்கில் பறிக்கும் செயல் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
இந்தக் குற்றச் சம்பவங்களை தடுக்க காவலாளர்கள் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.