சென்னை அருகே சோகம்.. விசிலை விழுங்கிய ஒரு வயது சிறுமி.. மூச்சுதிணறி பரிதாப சாவு..

Published : Oct 13, 2022, 12:09 PM IST
சென்னை அருகே சோகம்.. விசிலை விழுங்கிய ஒரு வயது சிறுமி.. மூச்சுதிணறி பரிதாப சாவு..

சுருக்கம்

சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த விசிலை விழுங்கிய ஒரு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆனந்த ராஜ் என்பவருக்கு 3 வயதில் தர்சன் என்ற மகனும் ஒரு வயதில் கயல்விழி என்ற மகளும் உள்ளனர். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் வழக்கம் போல் விளையாடிக் கொண்டிருந்த மகள் கயல்விழி, கையில் வைத்திருந்த விசிலை விழுங்கியுள்ளார்.

மேலும் படிக்க:”No!! No !!” வெளிநாட்டு வேலை.. இந்த தவறை மறந்தும் கூட பண்ணாதீங்க.. எச்சரிக்கை விடுத்து டிஜிபி வீடியோ பதிவு

அப்போது விசில் தொண்டைக்குள் சிக்கி, குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, மயக்கியுள்ளது. இதனை பார்த்து பதறி அடித்த ஓடி வந்த பெற்றோர், குழந்தையை தலைகீழாக தூக்கிப்போது வாயில் இருந்த விசில் கீழே விழுந்துள்ளது. பின்னர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் படிக்க:இந்துக்களிடமே பொருட்கள் வாங்க வேண்டும்..! நோட்டீஸ் விநியோகித்த இந்து முன்னணி நிர்வாகி..! தட்டி தூக்கிய போலீஸ்

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார், உடலை  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விளையாடும் போது விசிலை விழுங்கியதால் ஒரு வயது குழந்தை மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

23 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! எந்த மாவட்டங்களில் கனமழை தெரியுமா?
Tamil News Live today 25 January 2026: February Rasi Palan 2026 - பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிகளுக்கு வருமானம் பெருகும், பணம் கொட்டும், பொற்காலம் தொடங்கும்.!