வருகிறது கடற்கரையோரம் ரயில் பாதை - சென்னை டூ கன்னியாக்குமரி... இனி ஜாலி பயணம் தான்...

First Published Jun 24, 2017, 4:59 PM IST
Highlights
a new railway track chennai to kanniyakumari parallel ecr road


கிழக்கு கடற்கரை சாலையில், சென்னையில் இருந்து கன்னியாகுமரி இடையே புதிய ரயில் பாதை அமைக்க திட்டம் உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சென்னையில் இருந்து தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளுக்கான பல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று பிற்பகல் 2.45 மணியளவில் காணொலி காட்சி மூலம் எண்ணூர்-திருவொற்றியூர் இடையே 4-வது ரயில் பாதையை அவர் தொடங்கி வைத்தார்.

இதேபோல், 19 ரயில் நிலையங்களில் எல்.இ.டி. விளக்கு வசதியையும் அமைச்சர் தொடக்கி வைத்தார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு. 

சென்னை - கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை சாலையில் புதிய ரயில்பாதை அமைக்க திட்டம் உள்ளதாக அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

கிழக்கு கடற்கரை சாலையில் புதிய ரயில் பாதை அமைக்க மத்திய அரசுடன், தமிழக அரசு இணைந்து புதிய ரயில் திட்டத்தை அமைக்க உதவ வேண்டும் என்றும் கூறினார். இந்த புதிய ரயில் திட்டத்தை மத்திய அரசால் மட்டுமே அமைக்க முடியாது என்றார்.

கிழக்கு கடற்கரை சாலையில் புதிய ரயில் பாதை அமைப்பது குறித்து மத்திய அரசின் கருத்து தெரிவித்தவுடன் இந்த திட்டம் துவக்கப்படும் என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

click me!