கடவுளறிய ஈபிஎஸ்.. புன்னகையுடன் விஜய்: தமிழக அரசியலின் புதிய அத்தியாயம் !

கடவுளறிய ஈபிஎஸ்.. புன்னகையுடன் விஜய்: தமிழக அரசியலின் புதிய அத்தியாயம் !

Published : May 11, 2026, 03:03 PM IST

தமிழக அரசியலில் ஒரு வரலாற்றுத் தருணமாக, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் முன்னிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினராக எடப்பாடி பழனிசாமி ‘கடவுளறிய’ உறுதிமொழி எடுத்துக்கொண்டார். சட்டப்பேரவையில் தனது இருக்கையில் இருந்து வந்த எடப்பாடி பழனிசாமி, அவருடைய அரசியல் குருவான மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை நோக்கி வணங்கியபடி சென்றார். மிகுந்த உணர்ச்சிகரத்துடன் அவர் உறுதிமொழி எடுத்தபோது, தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ முதல்வர் விஜய்யின் பக்கம் தன் பார்வையைத் திருப்பவில்லை. இருப்பினும், எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகவும் உறுதியாகவும் பிரமாணத்தை வாசித்த அந்த நிமிடம் முழுவதும், முதல்வர் விஜய் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையுடன் அதனை அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தார். இரு துருவ அரசியல் தலைவர்களின் இந்த நுட்பமான உடல்மொழி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

03:23இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக ஆயத்தம்: மதுராந்தகத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் அணி கூட்டம்
06:51மக்களின் தீர்ப்பை ஏற்கத் தயங்குவது ஏன்? - மு.க.ஸ்டாலின் கருத்துகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் கண்டனம் !
08:06சென்னை: பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பு!
06:30வைகை நதியை மீட்புத் திட்டம்: மதுரையில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் பிரம்மாண்ட தூய்மை இயக்கம் !
04:20விநாயகர் சதுர்த்தி விழா: தூத்துக்குடியில் விறுவிறுப்பாக நடந்த மாட்டு வண்டி பந்தயம் !
02:11தவெக ஆட்சியாக ஆட்சியை நடத்தாமல் காட்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ! கி. வீரமணி பேட்டி
04:02திருச்சி : திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடந்த பெரியார் நினைவேந்தல் பேரணி !
02:38அரசு சட்டக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பங்கேற்பு !
03:14பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு !
02:57விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்காதே! - அரசை கடுமையாக சாடி விவசாயிகள் சங்கத்தினர் பேட்டி !