அமைச்சர் வீட்டருகே பகீர் சம்பவம்.! நாம் தமிழர் நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை- யார் இந்த பாலசுப்பிரமணி.?

By Ajmal Khan  |  First Published Jul 16, 2024, 9:06 AM IST

அரசியல் கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


தொடரும் கொலைகள்

சேலத்தில் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை, கடலூரில் பாமக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல், சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை என தமிழகத்தில் கொலை சம்பவத்தால் அதிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி மதுரையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tap to resize

Latest Videos

நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை

மதுரை மாநகர் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், இவர்  நாம் தமிழர் கட்சியின் வடக்குதொகுதி துணைச்செயலாளராக உள்ளார். இன்று காலை நடை பயிற்சி சென்ற போது மர்ம நபர்கள் அவரை வழி மறித்துள்ளனர். இதனையடுத்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்க தொடங்கியுள்ளனர். இதனால் அலறி அடித்து பாலசுப்பிரமணியன் ஓடியுள்ளார்.  ஆனால் பாலசுப்ரமணியனை விரட்டிய மர்ம கும்பல்  அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டஅருகே வல்லபாய் சாலை பகுதியில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்துள்ளன்ர. இந்த சம்பவம் மதுரை பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  தல்லாகுளம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யார் இந்த பாலசுப்பிரமணி.?

இதனிடையே படுகொலை செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணி மீது 3 கொலை வழக்குகள் இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. எனவே முன் பகை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலசுப்பிரமணியன் கொலை செய்யப்பட்ட இடத்தில் மதுரை காவல் ஆணையர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றார். 

நாம் தமிழர் நிர்வாகி ஓட ஓட விரட்டி படுகொலை... மதுரை பதற்றம்.. போலீஸ் குவிப்பு!

click me!