
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் விண்ணில் இருந்து வந்த மர்மப் பொருள் வீட்டின் கூரை மீது பயங்கர சத்தத்துடன் விழுந்து வெடித்ததில் பெண் ஒருவர் காயமடைந்தார்.
வாணியம்பாடி அடுத்த துரிஞ்சிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் நேற்றிரவு தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது விண்ணில் இருந்து பயங்கர சத்தத்துடன் மர்மப் பொருள் ஒன்று வீட்டின் மேற்கூரை மீது விழுந்தது வெடித்தது.
இதில் வெங்கடேஷின் மனைவி புவனேஷ்வரி பலத்த தீக்காயம் அடைந்தார்.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மர்மப் பொருள் வெடித்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடியில் மர்மப் பொருள் விழுவது இது முதல் முறை அல்ல. கடந்தாண்டு தனியார் அரசு கல்லூரியில் மர்மப் பொருள் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். விசாரணையில் அப்பொருள் விண்கல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது