நள்ளிரவில் விபத்துக்குள்ளான சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்..! பெட்டிகள் தனியாக கழன்று ஓடியதால் பரபரப்பு..

Published : Nov 06, 2022, 08:57 AM IST
நள்ளிரவில் விபத்துக்குள்ளான சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்..! பெட்டிகள் தனியாக கழன்று ஓடியதால் பரபரப்பு..

சுருக்கம்

சென்னையில் இருந்து கோவை சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்குள் சென்ற போது வண்டியில் இருந்த பெட்டிகள் தனியாக கழன்று சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.  

சேரன் ரயில் விபத்து

கோவைக்கு தினமும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும் அதில் முக்கியமான ரயிலாக சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளது. இந்த ரயிலில் இரவில் பயணத்தை தொடங்கினால் அதிகாலையில் கோவைக்கு சென்று விடலாம். இதன் காரணமாகவே ஏராளமானோர் இந்த சேரன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் பயணம் செய்ய விரும்புவார்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு பெரும் விபத்தில் இருந்து தப்பித்துள்ளது. சென்னையில் இருந்து புறப்பட்ட சேரன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்து சென்றுள்ளது.

டாஸ்மாக் ஊழியரிடம் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர்கள்.. கொத்தாக தூக்கிய போலீஸ்!

தனியாக சென்ற ரயில் பெட்டி

 அப்போது திடீரென பயங்க சத்தத்துடன்  ரயிலின் பெட்டிகள் திடீரென துண்டிக்கப்பட்டு தனியாக சென்றுள்ளது. அந்த ரயிலில் உள்ள  S7 மற்றும் S8 ஆகிய 2 பெட்டிகளின் இடையே இருந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது. ரயில் என்ஜின் மற்ற பெட்டிகளோடு சிறிது தூரம் பயணித்துள்ளது.  இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் அலறியுள்ளனர். இதனை கவனித்த ஓட்டுநர் பிரேக் பிடித்து வண்டியை நிறுத்தினார். இதன் காரணமாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து ரயில் பெட்டியில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டு மீண்டும் ரயிலானது இயக்கப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்து பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்

கோவை கார் வெடிப்பில் சிக்கிய பென் டிரைவ்.. 100க்கும் மேற்பட்ட ஐஎஸ் அமைப்பு வீடியோக்கள் - பரபரப்பு பின்னணி !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!
முக்தாரை உடனடியா கைது செய்யுங்க.. தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்.. அரசுக்கு சரத்குமார் எச்சரிக்கை