குறைந்தது மீன் விலை..! காசிமேட்டில் மீன், இறால்களை வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்

Published : Jul 09, 2023, 10:12 AM IST
குறைந்தது மீன் விலை..! காசிமேட்டில் மீன், இறால்களை வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்

சுருக்கம்

மீன்களின் விலை கடந்த வாரத்தை விட 100 ரூபாய் வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டதாலும், விடுமுறை தினமாக இருப்பதனாலும் மீன் வாங்க காசிமேடு துறைமுகத்தில் அதிகளவு மீன் பிரியர்கள் குவிந்தனர். 

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையான இன்று மீன்களை வாங்க அதிகாலை முதலே ஏராளமான மக்கள் காசிமேட்டில் குவிந்ததால் காசிமேடு திருவிழா போன்று கூட்டம் களைகட்டியது. மீன் வரத்து அதிகம் இருந்தாலும் கடந்த வாரத்தை விட மீன்கள் விலை நூறு ரூபாய் ஏற்ற இறக்கமாக விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை விட மீன்களின் விலை நூறு ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.  பெரிய வரத்து மீன்கள் அதிகமாக வந்துள்ளதால் மீன் விற்பனை ஏலக் கூடம் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது. கடந்த வாரத்தை விட விலை சற்று குறைந்திருந்தாலும் விலை ஏற்றமாகவே காணப்படுகின்றன. 

கடந்த வாரம் முழு வஞ்சிரம் 1400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை இன்று 1300 ரூபாய்க்கும், துண்டுகளாக வெட்டப்பட்ட ஸ்லைஸ் வஞ்சிரம் 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை இன்று 1700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. எனவே வஞ்சிரம் மீனை அசைவ பிரியர்கள் அதிகளவு வாங்கி சென்றனர். இந்தநிலையில் காசிமேடு மீன் சந்தையில் விற்கப்படும் மீன்களின் விலையை பொறுத்தவரை, 

 சங்கரா 450 ரூபாய் விற்பனை செய்யப்பட்டவை 400

 இறால் 480 ரூபாய் விற்பனை செய்யப்பட்டவை 500

 சீலா 500 ரூபாய் என விற்பனை விற்பனை செய்யப்பட்டவை 450

கருப்பு வவ்வால் மீன் 1000விற்பனை  செய்யப்பட்டவை 1050

வெள்ளை வவ்வால் மீன் 1400 விற்பனை செய்யப்பட்டவை 1400

கொடுவா- 700 விற்பனை செய்யப்பட்டவை 700

டைகர் இறா 1100 விற்பனை செய்யப்பட்டவை 1050

நண்டு- 500 விற்பனை செய்யப்பட்டவை 400

சங்கரா மீன்- 400 விற்பனை செய்யப்பட்டவை 400

கடல் விரால் - 800 விற்பனை செய்யப்பட்டவை 650

களவான் மீன் 600 விற்பனை செய்யப்பட்டவை 500

நெத்திலி - 300 விற்பனை செய்யப்பட்டவை 200

கடம்பா மீன் 350 விற்பனை செய்யப்பட்டவை 350

சுறா  500க்கு விற்பனை செய்யப்பட்டவை 1000

ஆழ்கடலுக்குச் சென்ற விசைப்படகுகள் அதிக அளவில் கரை திரும்பியுள்ளன. மேலும் மீன் வரத்து அதிகமாக இருப்பதினால் காசிமேடு மீன் சந்தை பரபரப்பாக திருவிழா போன்ற காட்சி அளிக்கிறது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!