
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, குறிப்பாக சமீபத்திய நாட்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிப்பதும், ஆங்காங்கு கொலை செய்து வீசப்படுவதும், தற்கொலை செய்துகொள்வதும், வீட்டில் மர்மமான முறையில் இறந்துக் கிடப்பதும் என பல குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் கழிவறையில் பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
தாடண்டர் நகரில் வசித்து வந்த 46 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வந்த வீடு பத்து நாட்களுக்கும் மேலாக பூட்டிக் கிடந்துள்ளது.
மேலும் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வீட்டுக் கதவை உடைத்து சென்று பார்த்தபோது, கழிவறையின் உள்ளே அழுகிய நிலையில், அந்தப் பெண்ணின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வீட்டின் கதவுகள் உள்புறமும், வெளியேயும் பூட்டியிருந்த நிலையில் அந்தப் பெண் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து சைதாப்பேட்டைபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது