
மெர்சல் மெர்சல் மெர்சல்...! ஆர்வத்தால் உயிரை இழந்த சிறுவன்...!
மெர்சல் படம் திரைக்கு வந்ததோ வந்தது....இளைஞர்கள் ஒரு பக்கம் உற்சாகமாக படத்தை பற்றி விமர்சித்து வருகின்றனர்....
இந்நிலையில் ஆர்வ கோளாறாக இளைஞர்கள் சிறுவர்கள் என அனைவருமே விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு,போஸ்டர் ஒட்டுவதில் ரொம்பவே பிசியாக இருந்து வந்தனர்
இந்நிலையில் மெர்சல் திரைப்படத்திற்கு பேனர் கட்டும் பொழுது, சுவர் இடிந்து விழுந்து ஏழாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் நேரு நகரை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் லோகேஷ்வரன் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே குடிநீர் இணைப்பின் மதில் சுவற்றின் மீது ஏறி தீபாவளியன்று வெளிவரும் மெர்சல் திரைப்படத்திற்கான பேனர் கட்ட முயற்சித்து உள்ளார்
அப்போது, எதிர பாராத விதமாக,மதில்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில், இடிபாடுகளில் சிக்கி பள்ளி மாணவன் லோகேஷ்வரன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இது குறித்து வாலாஜாபாத் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.என்னதான் விசாரணை மேற்கொண்டாலும்.....போனது போனது தானே...தேவைதானா இதுபோன்ற விபரீதம் .....
ரிஸ்க் என தெரிந்தும்...அதை சோதிக்கும் விதமாக நாம் செயலில் இறங்கினால்...அது நமக்கே ரிஸ்காக மாறி விடும் என்பதை புரிந்துகொள்ள இந்த சம்பவம் ஒரு உதாரணம்
மெர்சல் மெர்சல் என மாஸ் காட்டி வந்த இளைஞர்கள்..இந்த சிறுவன் இறந்ததற்கும் மாஸ் காட்டுவார்களா....
ஆர்வம் தேவைதான் ....அது அனைத்திற்குமே பொருந்தாது......