
ஆசைக்கு இணங்க மறுத்தாரா இளம்பெண்..? திண்டுக்கல் லாட்ஜில் ரூம் போட்டு பெண் கழுத்தறுப்பு...இளைஞர் தற்கொலை..!
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள டிஎம்டி என்ற தனியார் தங்கும் விடுதியில் 10 ஆம் தேதி பிரசாந்த் என்ற இளைஞர் ஒரு இளம் பெண்ணுடன் தனியாக ரூம் எடுத்து தங்கி உள்ளார்
இவர்கள் இருவரும் அறைக்குள் சென்று மூடிய கதவை திறக்கவே இல்லை. சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை திறக்க முயற்சி செய்து உள்ளனர்.
கதவை திறக்ககாததால் பலத்த சந்தேகம் எழுந்த நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்த போது, இளைஞர் பிரசாந்த் விஷமருந்தி, வாயில் நுரை தள்ளியவாறு உயிரிழந்து உள்ளார்.
பின்னர் அந்த பெண்ணை தேடிய போது அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார் குளியல் அறையில்...
இவருடன் வந்த அந்த பெண் யார் என்ற தகவல் இன்னும் தெரியவில்லை.அதே போன்று பிரசாந்த் கொடுத்த விலாசம் சரிதானா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும், பெண்ணின் கழுத்தை கொடூரமாக அறுத்த வாலிபர் பிரசாந்த் ஏன் இப்படி செய்தார்..? இவர்கள் இருவருக்கும் என்ன உறவு...? எதனால் இந்த கொலையை அவர் செய்துவிட்டு தானும் மாய்த்துக்கொண்டார் என விசாரணை தீவிரம் அடைந்துள்ளது உள்ளது
நிலக்கோட்டை கொங்கர்குளம் பகுதியை சேர்ந்தவர் என விடுதியில் முகவரி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.