தஞ்சையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டம் - மோடி, தீபக் மிஸ்ரா உருவபொம்மை எரிப்பு

First Published May 12, 2018, 12:39 PM IST
Highlights
kavery issue protest in tanjour


காவிரி மேலாண்மை  வரைவு வாரியம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் மத்திய அரசு கர்நாடாக தேர்தலை முன்னிறுத்தி பல்வேறு வகையில் தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறது .

இந்நிலையில் தீபக் மிஸ்ரா நீதிபதி மே 14க்குள் காவிரி வரைவு வாரியம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சையில் காவிரி மீட்புக்குழு பல்வேறு வகையில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.நேற்று தஞ்சை தபால் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி  காவிரி மீட்புக் குழு மக்கள் தஞ்சையில் விமானப் படைதளத்தை  முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

மேலும் மத்திய அரசின் இந்தப் போக்கை கண்டித்து முழக்க எழுப்பியதோடு பிரதமர் மோடியின் உருவ பொம்மையையும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் உருவ பொம்மையையும் எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். திடீரென சாலைமறியலில் ஈடுபட்டள்ளதால் புதுக்கோட்டை தஞ்சை இணைப்புச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகியுள்ளது.

 

 

 

 

click me!