பூங்காவிற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுமி பலி..! மூடி மறைக்க முயலும் அதிகாரிகள்- அன்புமணி ஆவேசம்

By Ajmal Khan  |  First Published Sep 8, 2022, 3:42 PM IST

பூங்கா அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து  சிறுமி உயிரிழப்பிற்கு காரணமான அலட்சிய அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும்  பா.ம.க.  தலைவர்  அன்புமணி வலியுறுத்தியுள்ளனர்.
 


பள்ளத்தில் விழுந்து சிறுமி பலி

தேனி மாவட்டம்‌, ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில்‌ பூங்காக்கள்‌ அமைப்பதற்காக வெகு நாட்களுக்கு முன்பு தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் இருந்துள்ளது. இந்தநிலையில் கழிவறை வசதி இல்லாததால்‌, இயற்கை உபாதைக்கு அங்கு சென்ற சிறுமி ஹாசினி மழைநீர்‌ நிரம்பியிருந்த குழியில்‌ தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையவைத்தது. இதனையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உயிரிழந்த சிறுமியின்‌ குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, அனுதாபத்தினையும் தெரிவித்துக்‌ கொள்வதாக கூறியுள்ளார். மேலும் சிறுமியின்‌ உயிரிழப்புக்கு பேரூராட்சி நிர்வாகமே காரணம்‌ என்பதால்‌, உயிரிழந்த சிறுமி ஹாசினியின்‌ குடும்பத்திற்கு 10 இலட்சம்‌ ரூபாய்‌ நிவாரண உதவி வழங்குமாறும்‌, அவரது குடும்பத்தில்‌ ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்குமாறு வலியுறுத்தி இருந்தார்.

Tap to resize

Latest Videos

புற்கள் மண்டி கேட்பாரற்று கிடக்கும் ஜெயலலிதா சிலை ...! செவிசாய்க்காத திமுக...! ஓபிஎஸ் ஆவேசம்

பேரூராட்சி அலட்சியமே காரணம்

இந்தநிலையில் பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில். தேனி மாவட்டம் ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில், இயற்கை அழைப்புக்காக சென்ற போது,  பூங்கா அமைப்பதற்காக தோண்டி வைக்கப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து ஹாசினி  என்ற 8 வயது சிறுமி உயிரிழந்தது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு  அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பூங்கா அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றிலும் தடுப்பு அரண்கள் வைக்கப்படாததும்,  கழிப்பறை வசதிகள்  செய்து தரப்படாததும் தான்  அப்பாவி சிறுமி உயிரிழந்ததற்கு  காரணம் ஆகும்.  சின்னமனூர் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் தான் இதற்கு காரணம் ஆகும்! சிறுமி ஹாசினியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த பேரூராட்சி அதிகாரிகள்,

3 மாத புலிக்குட்டி வேணுமா.. அப்படினா 25 லட்சம் கொடுங்க.. ஸ்டேட்டஸ் வைத்து தனக்கு தானே ஆப்பு வைத்த இளைஞர்

ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

அந்தக் குழந்தையின் உயிரிழப்பை மூடி மறைக்கவும் முயன்றிருக்கிறார்கள். பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின்  முயற்சியால் தான்  சிறுமி ஹாசினியின் உயிரிழப்பு வெளியில் வந்திருக்கிறது! அலட்சியமாக செயல்பட்டு ஹாசினியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு  ரூ. 25 லட்சம்  இழப்பீடு வழங்க  தமிழக அரசு முன்வர வேண்டும் என அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

மாணவர்கள் ஆயுதங்களை எடுத்தால் சிறைக்கு அனுப்புவோம்..! காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

click me!