
ஏழ்மை நிலையைக் காரணம் காட்டி, தனது மகனுக்கு திருமணம் செய்ய மறுத்ததால் இளம் பெண் ஒருவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே திருவாரூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் சிந்துஜா (20). பாட்டி, சித்தி பராமரிப்பில் வளர்ந்த சிந்துஜா, சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் உள்ள பயிற்சி மையத்தில் சிந்துஜா படித்து வந்தார். அப்போது, விருதுநகர், திருத்தங்கலைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நட்பு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்ததாக கூறப்படுகிறது.
மதுரையில் உள்ள என்ஜினியரிங் கல்லூரியிலும், காதலன் விருதுநகரில் உள்ள என்ஜினியரிங் கல்லூரியிலும் படித்து வந்துள்ளனர். இந்த நிலையில், சிந்துஜா தனது காதலனிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வந்துள்ளார். பிளேடால் கையை அறுத்துக் கொண்ட புகைப்படத்தை வாட்ஸ் ஆப் மூலமாகவும், காதலனுக்கு படத்தை அனுப்பி வைத்துள்ளார் சிந்துஜா.
இவரது வற்புறுத்தல் காரணமாக சிந்துஜாவின் காதலன், குடும்பத்துடன் பெண் கேட்டு வந்துள்ளதாக தெரிகிறது. சிந்துஜா வீட்டின் ஏழ்மை நிலையைப் பார்த்த காதலனின் பெற்றோர், அவரை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிந்துஜா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார்.
இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் சிந்துஜாவை, மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிந்துஜா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.