17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை… தாயின் கள்ளக் காதலன் கைது !!

 
Published : Mar 31, 2018, 08:44 AM ISTUpdated : Sep 19, 2018, 02:11 AM IST
17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை… தாயின் கள்ளக் காதலன் கைது !!

சுருக்கம்

a girl baby to 17 year girl and arrest a man in chennai

சென்னையில் தாயின் கள்ளக்காதலன் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் , 17 வயது சிறுமிக்குப் பெண்குழந்தை பிறந்துள்ளது. அதை மறைத்த குற்றத்திற்காக அந்த சிறுமியின் தாயும், அவரது கள்ளக் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர்,  ராமலட்சுமி.  இவரது மகள் கனராமலட்சுமிக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், கடந்த சில ஆண்டுக்கு முன்பு பிரிந்துவிட்டனர்.  இதையடுத்து ராமலட்சுமியும், கனகாவும் தனியாக வசித்துவந்தனர்.

இந்நிலையில்  ராமலட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.  இது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது.  கூலித் தொழிலாளியான ரமேஷ், ராமலட்சுமி, கனகா ஆகியோர் தொடர்ந்து ஓரே வீட்டில் வசித்துவந்துள்ளனர். 

இதனிடையே சில மாதங்களாக கனகாவின் உடலில் மாற்றம் தெரிந்துள்ளது. அவர் கர்ப்பமானார். இதுகுறித்து அவரது தாயார் கேட்டபோதெல்லாம் கனகா ஒன்னுமில்லை என கூறி சமாளித்துள்ளார்.

ஒருகட்டத்தில், கனகாவால் மறைக்கமுடியவில்லை. அப்போது தான் நிறைமாத கர்ப்பிணி என்றும், அதற்குக் காரணம் ரமேஷ்தான் என்று உண்மையைச் சொன்னார் கனகா.  இதனால் அதிர்ச்சி அடைந்த ராமலட்சுமி, ரமேசுடன் தகராறு செய்திருக்கிறார்.

இந்நிலையில்  கடந்த 19-ம் தேதி, கனகாவுக்குப் பெண்குழந்தை பிறந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு, குழந்தை விவகாரம் தெரிந்தால் சிக்கல் என்று கருதிய ராமலட்சுமி அந்த குழந்தையை உறவினர்களிடம் கொடுத்து சமாளித்துள்ளார்.

ஆனால் இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரிடமும் விசாரணை நடத்திய போலீஸார், சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ரமேஷையும், குற்றத்தை மறைத்ததற்காக மகாலட்சுமியையும்  கைதுசெய்தனர். 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!