யானை நிற்பது தெரிந்தும் அசால்டாக சென்ற ஜெர்மனி சுற்றுலா பயணி.! தூக்கி வீசியதில் துடிதுடித்து பலி

Published : Feb 05, 2025, 09:17 AM ISTUpdated : Feb 05, 2025, 09:53 AM IST
யானை நிற்பது தெரிந்தும் அசால்டாக சென்ற ஜெர்மனி சுற்றுலா பயணி.! தூக்கி வீசியதில் துடிதுடித்து பலி

சுருக்கம்

வால்பாறையில் சுற்றுலா சென்ற ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி மைக்கேல் ஜூர்சன், காட்டு யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். டைகர் பள்ளத்தாக்கு பகுதியில் யானையின் எச்சரிக்கையை மீறி சாலையைக் கடக்க முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஊருக்குள் வரும் காட்டு யானைகள்

வன விலங்களுகளுக்கும்- மனிதர்களுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த அளவிற்கு காடுகளை அழித்து வீடுகள், விடுதிகள் புதிது புதிதாக துவக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காடுகளில் இருக்கும் விலங்குகள் ஊருக்குள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் காட்டுயானை ஊருக்குள் வந்து வீடுகளை அடித்து உடைப்பதும், பயிர்களை அழிப்பதும் வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் வாழ்பாறை பகுதியில் சுள்ளி கொம்பன் என்ற யானை அந்த பகுதி மக்கள் அச்சுறுத்தி வருகிறது. எனவே யானையை அடந்த வனப்பகுதிக்குள் விட அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். 

வால்பாறையை அச்சுறுத்தும் காட்டு யானை

இந்த நிலையில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இயற்கையை ரசிப்பதற்காக வால்பாறை பகுதிக்கு சுற்றுலா வருகிறார்கள். இந்த நிலையில்  டைகர் பள்ளத்தாக்கு காட்சிமுனை பகுதியில் காட்டு யானை தாக்கி, வெளிநாட்டு சுற்றுலா பயணி பலத்த காயம் அடைந்து உயிரிழந்துள்ளார். அந்த வகையில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி மைக்கேல் ஜூர்சன் (வயது 77) இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார். கோவை பகுதியில் பைக்கை வாடகைக்கு எடுத்து பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துள்ளார். அந்த வகையில், வால்பாறையில் சுற்றிப் பார்த்துவிட்டு பொள்ளாச்சி செல்வதற்காக  டைகர் பள்ளத்தாக்கு பகுதியில் செல்லும் போது அங்கு ஒற்றை காட்டு யானை நின்றுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு

இதன் காரணமாக வாகனங்கள் முன்னேறி செல்லாமல் ஓரமாக நின்றுள்ளது. அப்போது பொதுமக்களின் எச்சரிக்கை செய்தும் எச்சரிக்கையை மீறி மைக்கேல் ஜூர்சன் சாலையைக் கடக்க முயன்றதால் யானை அவரை தாக்கியுள்ளது. இதனால் வாகனங்களில் இருந்த மக்கள் சப்தம் எழுப்பி யானையை விரட்ட முற்பட்டனர். இருந்த போதும் யானை வெளிநாட்டு சுற்றுலா பயணி மற்றும் அவரது பைக்கை தூக்கி எரிந்துள்ளது.

இந்த காட்சியானது தற்போது வெளியாகியுள்ளது. இதில் கால் மற்றும் கைகளில் வெளிப்புற காயங்கள் ஏற்பட்டன. இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலினின்றி சுற்றுலா பயணி உயிரிழந்தார். 

PREV
click me!

Recommended Stories

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 5 முதல் 8 மணிநேரம் வரை மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி