கோடை விடுமுறையை குறி வைத்து குழந்தை கடத்த புது கும்பல்..! பெற்றோர்களே உஷார்..!

 
Published : May 07, 2018, 04:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
 கோடை விடுமுறையை  குறி வைத்து  குழந்தை கடத்த புது கும்பல்..! பெற்றோர்களே உஷார்..!

சுருக்கம்

a gang formed to kidnap the kids from tamilnadu

தமிழகத்தில் குழந்தையை கடத்த வட மாநிலத்தில் இருந்து ஒரு பெரிய கும்பல் வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது .

ஆனால் குழந்தை கடத்துபவர்கள் எல்லாம் வட மாநிலத்தவர்கள் தான் என முடிவு செய்து விட முடியாது. அதே வேளையில் பல வட மாநிலத்தவர்கள் இந்த  வேளையில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் உள்ள வீட்டில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டப்பட்டு இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

மேலும் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டப்பட்ட வீடுகளில் குழந்தைகள் இருப்பதை வைத்து இதனை உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் சில இடங்களில் சந்தேகப்படும் வகையில் வட மாநிலத்தவர்கள்  தென்பட்டால் பொதுமக்களே அவர்களை பிடித்து கட்டிப்போட்டு உதைத்து, பின்னர் காவலர்களிடம் ஒப்படைத்து விடுகின்றனர்.

இந்நிலையில் வாட்ஸ் அப்பில் சில நாட்களான ஒரு ஆடியோ பரவி வருகிறது.

அதில், தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை என்பதால்,பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் சமயத்தில் குழந்திகளை கடத்தும் முயற்சில் வட மாநிலத்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும், இதற்காக  சுமார்  200 நபர்கள் வரை தமிழகத்தில் ஊடுருவி விட்டதாகவும், அதில் சுமார் 10 நபர்களை மட்டும் காவல் துறையினர் கைது செய்து உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

இதற்கிடையில் சில இடங்களில் சந்தேகிக்கப்படும் நபர்கள் சிக்குகின்றனர். மேலும், குழந்தைகளை குறி வைப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமழகத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு கடத்தி செல்லப்படும் குழந்தைகளை பிச்சை எடுக்க விடுவதும், அநாதை இல்லங்களில் உள்ள குழந்தைகளை கணக்கு காண்பித்து, நன்கொடை பெறுவதற்கும் பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது.

மேலும் பெண் குழந்தைகளை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்வதும், மேலும் பல கொடுமைகள் நடக்கின்றன

எனவே  பெற்றோர்களாகிய நாம் குழந்தைகள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்து நமது பிள்ளைகளை பாதுகாப்பது நமது கடமை.

PREV
click me!

Recommended Stories

சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்
கரூரில் விஜய் கட்சியில் கூட்டமாக சேர்ந்த இஸ்லாமியர்கள்..! செந்தில் பாலாஜிக்கு டப் கொடுக்கும் மதியழகன்