
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி என்று முதல் ஒளிபரப்பாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய போதிலும் அதை பலரும் பார்த்து ரசித்தனர். இந்நிலையில் அடுத்த சீசன் துவங்க உள்ளது. முதல் சீசனை போன்றே இதுவும் 100 நாட்கள் நடக்கும். கமல்ஹாஸன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். சென்னை-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருக்கும் ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் பிக் பாஸ் வீட்டிற்கான செட் போடும் பணிகள் நடந்து வருகிறது. அந்த செட்டில் வைத்து ப்ரொமோ வீடியோவும் எடுத்துள்ளனர்.
கடந்த சீசனில், ஓவியாவின் குறும்புத்தனம், ஆரவ் உடன் காதல், காயத்திரி ரகுராம் கெட்டவார்த்தை பேசியது, ஜல்லிக்கட்டு புகழ் ஜூலியின் நாடகத்தனம், சினேகனின் கட்டிப்பிடி என சுவாரஸ்யமும், சர்ச்சையுமாக நிகழ்ச்சி களை கட்டியது. போட்டியின் இறுதியில் ஆரவ் வெற்றி பெற்றார். இதன் இரண்டாவது சீசன் விரைவில் ஆரம்பமாக உள்ளது. இந்த முறை சூர்யா அல்லது அரவிந்த்சாமி இருவரில் ஒருவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதாக செய்திகள் வந்தன.
பின்னர் கமலே தொடரப்போவதாக கூறப்பட்டது. தற்போது கமலே சீசன் 2வையும் தொடர இருக்கிறார். சமீபத்தில் இதற்கான புரொமோஷன் சூட்டிங் நடந்துள்ளது. இதில் கமல் பங்கேற்று நடித்திருக்கிறார். விரைவில் இந்த புரொமோ வீடியோ ஒளிப்பரப்பாக இருக்கிறது. ஜூன் 17 முதல் பிக்பாஸ் 2 ஆரம்பமாகும் என தெரிகிறது.
மேலும், பிக்பாஸ் 2-விற்கான போட்டியாளர்களை தேடும் பணியில் இருந்தது பிக்பாஸ் குழு. இந்நிலையில், முதற்கட்டமாக 30 பிரபலங்களின் பட்டியலை தயார் செய்துள்ளது. இந்த முதல் பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்படும் 14 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக அனுப்பப்படுவார்கள்.
இந்த போட்டியில், இனியா, கஸ்தூரி, ராய்லக்ஷ்மி, லட்சுமி மேனன், ஜனனி ஐயர், சுவர்ணமால்யா, பூனம் பாஜ்வா, ப்ரியா ஆனந்த், நந்திதா, பரத், ஷாம், சாந்தனு, அசோக் செல்வன், ஜித்தன் ரமேஷ், ஜான் விஜய், படவா கோபி, பவர் ஸ்டார், ப்ரேம்ஜி, யூகி சேது, விஜய் வசந்த், நாஞ்சில் சம்பத், பால சரவணன், ப்ளாக் பாண்டி, சாரு நிவேதா, தாடி பாலாஜி, டேனியல் ஆனி போப், ஆலியா மனாசா, ரகபஷிதா, கீர்த்தி சாந்தனு, அமித் பார்கவ் என ஒரு லிஸ்ட் ரெடியாகிவிட்டது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் யார், யார் எல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 100 நாட்கள் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
ஜூன் லருந்து பிக்பாஸ் சீசன் 2,திரும்பவும் கமல் இந்தமுறை யாரும் ஓவியா அளவுக்கு பாப்புலராவாங்களா என்பது சந்தேகம்தான் ஆனால் ஒன்று மட்டும் உறுதி நமக்கு பல குறும்படங்களும் காத்திருக்கிறது.