
இனி மது வாங்க பாருக்கு போகவேண்டாம்....வீட்லயே பார் வச்சிக்கலாம்.
குடிமகன்களுக்கு இந்த செய்தி பெரும் இன்ப அதிர்ச்சியாக தான் இருக்கும். காரணம்...வீட்டிலேயே மினி பார் அமைக்க அனுமதி கிடைக்கிறது என்றால் பேரு மகிழ்ச்சி தானே ...
அடிக்கடி பாருக்கு சென்று, மது அருந்தும் பழக்கம் உள்ள நபர்கள் இந்த வாய்ப்பை பயன்பத்துக்கொள்ளலாம்.
அதாவது, வீட்லிலேயே மினி பார் அமைத்துக்கொள்ள, ரூ.20,000 செலவிட்டாலே போதும்..வாழ் நாள் உரிமமே கிடைத்து விடுகிறது என்றால் பாருங்களேன் ...
வாங்க இதை பற்றி சற்று விவரமாக பார்க்கலாம்.
உரிய உரிமம் பெறப்பட்ட வீட்டு பாரில்,
12 பாட்டில்கள் இந்திய மதுபானம் (750 மிலி),
24 பாட்டில்கள் இந்திய தயாரிப்பான வெளிநாட்டு மதுபானம் (750 மிலி),
12 பாட்டில் ரம் (750 மிலி),
24 பாட்டில் பீர் (650 மிலி),
24 பாட்டில் ஒயின் (750 மிலி),
12 பாட்டில் வோட்கா/ஜின்/சைடர் (750 மிலி) வைத்துக்கொள்ளலாம்.
வீட்டில் மினி பார் ஒரு முறை வைத்துவிட்டால் அதனை புதுபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் வாழ்நாள் உரிம வசதி ஹரியானாவில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வேறு இடத்திற்கு மாற நினைத்தால், உரிமம் வாங்கிய விண்ணப்பதை மட்டும் என்பதால் போதுமானது மீண்டும் அதனை புதுபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான எண்ணிகையில் மது பாட்டில்களை வீட்டில் உள்ள மினி பாரில் வைத்து இருந்தால், பிரிவு 61, பிரிவு 61A ஆகியவற்றின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டு உள்ளது.