"ஊட்டிக்கு பிக்னிக் போறீங்களா?" - அப்ப இதை தயவு செய்து படிக்காதீங்க

Asianet News Tamil  
Published : Apr 17, 2017, 09:25 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
"ஊட்டிக்கு பிக்னிக் போறீங்களா?" - அப்ப இதை தயவு செய்து படிக்காதீங்க

சுருக்கம்

a detail report for ooty picnic lovers

உப்பு, புளி! யானைக்கே கொடுக்குறாங்க கிலி

சி.பி.எஸ்.இ.., மெட்ரிக்... அரசு என அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விட்டு புள்ளைங்களை போயிட்டுவாங்க கண்ணுங்களான்னு வீட்டுக்கு அனுப்பிவிட்டாங்க. இன்னும் ரெண்டு மாசத்துக்கு பெத்தவங்களுக்கு பர்ஸுல பத்து பைசா மிஞ்சாது. ஒரே டூர்தான், பர்சேஸ் தான், ஃபிலிம்முதான்.

அப்பா அம்மாவுக்கு ஆப்பு வைக்கிறதுல புள்ளைங்களத் தாண்டி பெரிய கில்லாடிங்க இந்த டூரிஸ்ட் பிளேஸ் இன்சார்ஜ் தாங்க. நையா பைசா பெறாத விசயத்தையும் நயன்தாரா ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக காட்டி உள்ளே இழுத்துபோட்டு கறந்துடுவாங்க. சில நேரங்கள்ள கல்லாவை நிரப்புறத்துக்காக இந்த படுபாதகத்தையும் இவங்க செய்யத் தயங்குறதில்ல...

அந்த வகையில நீலகிரி மாவட்டம் முதுமலை, கூடலூர் உள்ளிட்ட வனப்பகுதியில தனியார் ரெசார்ட்டுல தங்க நினைக்கிற குடும்பங்களுக்கு, வாடகையை பார்த்தா பேயறைஞ்ச மாதிரி இருக்குதாம். அவ்வளோ எக்கச்சக்கம். அது கூட பரவாயில்லைங்க.எங்க ரெசார்ட்டுல தங்குனீங்கன்னா, ரெசார்ட் வாசலுக்கே யானை, சிறுத்தை, வர்றதை பார்க்கலாம் அப்படின்னு எக்ஸ்ட்ரா பிட்டை ஏத்திப்போட்டு  ஆள் பிடிக்கிறதுல இவங்க வெல் எக்ஸ்பர்ட்...

இதை நம்பி வந்து உட்காரும் கெஸ்டுங்க யானையை பார்க்கலேன்னா ரெசார்ட் ஓனரை பிளிறி எடுத்துடுவாங்கல்ல.அதனால இந்த ரெசார்ட் டீம் ஒரு அத்துமீறலை சத்தமே இல்லாம அரங்கேத்தறாங்களாம். அதாவது யானைகளுக்கு பிடிச்ச உப்பு புளி இவற்றை உருண்டை உருண்டையா உருட்டி காட்டுல இருந்து தங்களோட ரெசார்ட் வரைக்கும் போட்டு வெச்சு யானைகளை செயற்கையா தூண்டி வரவைக்கறாங்க.

யானையை பார்த்ததும் குஷியாகுற கெஸ்ட்டுங்க கத்தறதும் , தண்ணீர் பாட்டிலை தூக்கி வீசறதுன்னு அடிக்கிற லூட்டிக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு. போதைல இருக்கிற சில நல்ல மனுஷங்க சரக்கு பாட்டிலை தூக்கி வீசற கூத்தும் நடக்குதாம்.ஆனா தனக்கு இஷ்டமான சாப்பாடு கிடைக்குதேன்னு யானைங்க இந்தப்பக்கமா வந்து மேயுறது தொடருது. 

கெஸ்ட்டுங்க வீசற கண்ட கருமத்தையும் திண்ணு வயித்து நோவுல யானைங்க படுக்குற கூத்தும் நடக்குது. இந்த மாதிரியான காரியங்களை வன உயிரின ஆர்வலர்கள் வன்மை காண்டிக்கிறாங்க.தன்னோட சுயலாபத்துக்காக யானைகளை செயற்கையா வழிமாற்றி வரவழைக்கிறதும், டீஸ் பண்றதும் அதுங்களோட வாழ்க்கை ஓட்டத்தை பெருமளவு பாதிக்கும்னு எச்சரிச்சிருக்காங்க.ஆனாலும் உப்பு புளி உருண்டை வைக்கிறது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்குதாம்.

இருக்கட்டும் ஒருநாள் ரெசார்ட்டுல இருந்து  காட்டுக்குள்ளே வரைக்கும் கரன்ஸி உருண்டையை போட்டு இந்த ரெசார்ட் ஆளுங்களை உள்ளே இழுத்து வச்சு காட்டு காட்டுனு காட்டினாத் தான் அடங்குவாங்க போல

PREV
click me!

Recommended Stories

என் உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்காக தான்.. மேடையில் கண் கலங்கிய செங்கோட்டையன்..
ரகுபதிக்கு கொஞ்சமும் கூச்சம் இல்லை... எத்தனை அடி வாங்கினாலும், Wanted-ஆக வண்டியில் ஏறுகிறார்... இபிஎஸ் ஆவேசம்..!