
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருவதைத் தொடர்ந்து, சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகமாகத் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இது குறித்துப் பேசிய ஆதரவாளர் ஒருவர், "இந்த வெற்றி என்பது பெரிய அரசியல் கட்சிக்கான வெற்றி அல்ல; விஜய் அண்ணனை நம்பி எதையுமே எதிர்பார்க்காமல் வந்த சாமானிய மக்களுடையவும், இளைஞர்களுடைய கனவின் வெற்றி" எனத் தெரிவித்தார். கொண்டாட்டத்தின் போது ஆதரவாளர்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.