காலை 6 மணி முதல் 7மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 118 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தீபாவளி கொண்டாட்டம்
பட்டாசு வெடிப்பதால் சுற்று சூழல் மாசு ஏற்படுவதால் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தீபாவளி தினத்தில் காலையில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்கவே தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு காரணமாக பொதுமக்கள் மூச்சு விடுவதிலேயே சிரமம் உண்டாகியுள்ளது. இதனால் கட்டுமான பணிகள், கார்கள் இயக்குவதற்கும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 118 பேர் மீது வழக்கு
இந்தநிலையில் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பட்டாசுகள் வெடிக்க நேரம் கொடுக்கப்படும். அந்த வகையில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7.மணி முதல் 8 மணி என இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சென்னையில் காலை 7 மணிக்கு பிறகும் பட்டாசு வெடித்ததாக கூறி 118 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதே போல தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பட்டாசு வெடித்ததாக கூறி ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
வெறிச்சோடிய சென்னை... பேருந்து, ரயில் மூலம் இத்தனை லட்சம் பேர் வெளியூர் பயணமா.?- வெளியான பட்டியல்