சாலைத் தடுப்பை இடித்துக்கொண்டு 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த கார்; நால்வர் பலத்த காயம்...

 
Published : Dec 26, 2017, 07:28 AM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
சாலைத் தடுப்பை இடித்துக்கொண்டு 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த கார்; நால்வர் பலத்த காயம்...

சுருக்கம்

A car crashing down 30 feet from the road blockade Fourth injured ...

காஞ்சிபுரம்

தாம்பரம்  - மதுரவாயல் புறவழிச்சாலையின் மேம்பாலத்தில் இருந்து கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்பை இடித்துக்கொண்டு 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் காரில் பயணித்த நான்கு இளைஞர்கள் பலத்த காயமடைந்தனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் கார்த்திக் (24), ஜீவா (25), நாகராஜ் (24), தினேஷ் (26) ஆகிய நால்வரும் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு காரில் வந்திருந்தனர். இவர்கள் நால்வரும் மீண்டும் காரில் திருவண்ணமலைக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புறப்பட்டனர். காரை கார்த்திக் ஓட்டிச் சென்றுள்ளார்.

தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில், தாம்பரம் செல்வதற்காக இரும்புலியூரில் இடது புறம் சாலை இரண்டாகப் பிரியும்.  அங்கு  "திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை" என்ற பெரிய அளவிலான பிரதிபலிப்பு எழுத்துக்களுடன் கூடிய பலகை எதுவும் இல்லாததால் எவ்வளவு பெரிய ஓட்டுநராக இருந்தாலும் சற்றே தடுமாறக் கூடும். அப்படி இருக்குமாம் அந்த சாலை.

அந்த இடத்தை நெருங்கும் அப்பாதையில் பழக்கமில்லாத ஓட்டுநர்கள் நிலைத்தடுமாறி, தாம்பரம் செல்லும் இடப்புறச் சாலையில் இறங்கி விடுவதுமுண்டு. இதேபோன்ற சிக்கல்தான் கார்த்திக் ஓட்டிய காருக்கும் ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இடத்தில் இரும்புலியூர் மேம்பாலத்தின் மீது வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பை உடைத்துக் கொண்டு 30 அடி உயரத்தில் இருந்து பள்ளத்திற்குள் கீழே விழுந்தது. இதில் கார் அப்பளம்போல நசுங்கி, அதில் பயணித்த நால்வரும் காரினுள்ளே சிக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவலாளர்கள் விபத்துக்கு உள்ளானவர்களை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைப் பெற்ற நால்வரும் மேல் சிகிச்சைக்காக இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுகு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப் பதிந்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!