தீபாவளி சிறப்பு பேருந்துகள்… நேற்று மட்டும் 89,932 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்!!

By Narendran SFirst Published Nov 2, 2021, 12:04 PM IST
Highlights

சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 488 பேருந்துகளில் 89 ஆயிரத்து 932 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் வரும் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக வெளியூரில் உள்ள மக்கள் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊா்களுக்கு படையெடுத்துள்ளனர். இந்த நிலையில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக தமிழக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதிக்காக நேற்று முதல் வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் சென்னையில் இருந்து 391 எண்ணிக்கையிலும், பல்வேறு இடங்களில் இருந்து பிற ஊா்களுக்கு 894 பேருந்துகள் என மொத்தம் 1,285 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில், கே.கே. நகா் பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி, கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 488 பேருந்துகளில் 89 ஆயிரத்து 932 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முதலே பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச்செல்ல தொடங்கி விட்டனர். இன்றும், நாளையும் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி, பாதுகாப்பாக தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திட ஏதுவாக, பல்வேறு சிறப்புப் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நேற்று முதல் நாளை வரையில் தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,506 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து 9,806 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 6,734 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,540 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வருவோரின் வசதிக்காக 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன்,  4,319 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5,000 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 17,719 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சென்னையில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 488 பேருந்துகளில் 89 ஆயிரத்து 932 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. போக்குவரத்து துறையின்சார்பில்  தீபாவளி 2021 பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று இரவு  24.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,100 பேருந்துகளில் 2,100 பேருந்துகளும், 388 சிறப்பு பேருந்துகளும் என ஆக மொத்தம் 2,488 பேருந்துகளில் 89,932 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் இதுவரை  97,717 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

click me!