ஐ.டி. ஊழியருக்கு எமனாக மாறிய பள்ளம்.. அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி உயிரிழந்த பரிதாபம்..!

By vinoth kumar  |  First Published Nov 2, 2021, 10:39 AM IST

சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் முகமது யூனுஸ்(31). இவர் ஐ.டி. ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் பொதுவாகவே தனது இரு சக்கர வாகனத்தில் தான் அலுவலகத்திற்கு செல்வது வழக்கம். அதேபோல், வழக்கம் போல இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்ததால் வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்கினர். 


சென்னை கிண்டியை அடுத்த சின்னமலை பகுதியில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் மீது  மாநகர அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் ஐ.டி. ஊழியர் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி துடிதுடித்து உயிரிழந்தார். 

சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் முகமது யூனுஸ்(31). இவர் ஐ.டி. ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் பொதுவாகவே தனது இரு சக்கர வாகனத்தில் தான் அலுவலகத்திற்கு செல்வது வழக்கம். அதேபோல், வழக்கம் போல இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்ததால் வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்கினர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- 4 நாளில் முடிந்து போன திருமண வாழ்க்கை.. கார் விபத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த புதுமண தம்பதி..!

இந்நிலையில், வேலைக்கு சென்று கொண்டிருந்த முகமது யூனுஸ் சின்னமலை பகுதி வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, தனியார் விடுதிக்கு எதிரே சாலையில் உள்ள மழை நீர் தேங்கி நின்ற பள்ளத்தில் வாகனம் இறங்கியதால் நிலை தடுமாறியுள்ளார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்துக்கு முன்பாக சென்று கொண்டிருந்த வடபழனி நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது பேருந்தின் பக்கவாட்டில் மோதியதால், நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதையும் படிங்க;- சாதி மறுப்பு காதல் திருமணம்.. பெற்ற மகன் ஆணவக் கொலை? கைக்குழந்தையுடன் உருண்டு புரண்டு கதறிய மனைவி..!

அப்போது மாநகரப் பேருந்து இடையே சிக்கி பேருந்தின் பின் சக்கரம் தலையில் மீது ஏறியதில் முகமது யூனுஸ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக உடனே கிண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  முகமது யூனுஸ் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க;- நெஞ்சை பதற வைக்கும் செய்தி.. கணவன் கண்ணெதிரே 7 மாத கர்ப்பிணி தலை நசுங்கி உயிரிழப்பு..!

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் விபத்து தொடர்பான காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து, பேருந்து ஓட்டுநர் தேவராஜை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்ததால் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

 முகமது யூனுஸ் விழுந்ததற்கு சாலையில் இருந்த பள்ளமே முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. இது போன்ற போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் உள்ள பள்ளங்களை மாநகராட்சியினர் மூட வேண்டும். குறைந்தபட்சம் சிமென்ட் கலவை போட்டாவது மூடியிருக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதை மாநகராட்சி முன்கூட்டியே செய்திருந்தால் அநிநாயமாக ஒரு உயிர் போயிருக்காது என்று பொதுமக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

click me!