அடிச்சி ஊத்தும் கன மழை... 5 மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

By Asianet TamilFirst Published Nov 2, 2021, 7:46 AM IST
Highlights

மத்திய மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை நீடித்து வரும் நிலையில் 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடையத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தின் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது தொடர்ந்து நீடிக்கும் என்றும் அதன் பிறகு அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. மேலும் இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், வருகிற நவம்பர் 3-ஆம் தேதி வரை மழை பெய்யும் என்றும் சில மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மைய தெரிவித்திருந்தனர்.

அதன்படி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருவாரூ, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெயது வருகிறது. மத்திய மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. மழை காரணமாக நெல்லை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.  

இந்நிலையில் மழை காரணமாக கடலூரில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் உள்ள பள்ளிகளுக்கு மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!