தமிழகத்துக்கு 8 விஸ்வகர்மா விருதுகள்... திருச்சி பெல், சேலம் உருக்காலை ஊழியர்களுக்கு விருது!

By vinoth kumar  |  First Published Sep 18, 2018, 1:48 PM IST

2016-ம் ஆண்டில் நிறுவனங்களின் சிறந்த செயல்பாட்டுக்கு தமிழகத்துக்கு 8 விஸ்வகர்கா விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.


2016-ம் ஆண்டில் நிறுவனங்களின் சிறந்த செயல்பாட்டுக்கு தமிழகத்துக்கு 8 விஸ்வகர்கா விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. திருச்சியில் உள்ள பெல்(பிஎச்இஎல்) நிறுவனத்தின் ஊழியர்களுக்கு 7 விருதுகளும், சேலம் உருக்காலை ஊழியர்களுக்கு ஒரு விருதும் என மொத்தம் 8 விருதுகளும் கிடைத்துள்ளன.

 

Tap to resize

Latest Videos

undefined

2016-ம் ஆண்டில் சிறந்த வகையிலான செயல்பாடுகளுக்கு 28 விஸ்வகர்மா தேசிய விருதுகள் 139 பேருக்கும், தேசிய பாதுகாப்பு விருதுகள் 128 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. மொத்தம் 3 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.  இதற்கான நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. விருதுகளை மத்திய தொழிலாளர் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கெங்வார் வழங்கினார். 

திருச்சியில் உள்ள பிஎச்இஎல்(பெல்) நிறுவனத்தில் முதலாம் யூனிட்டைச் சேர்ந்த ஊழியர்களான கிரேன் ஆப்ரேட்டர் சுந்தர்ராஜன், டர்னர் எம். பத்மநாபன் ஆகியோர் ஏ பிரிவில் விருதுகளைப் பெற்றனர். மேலும் 6 விருதுகளை இந்த நிறுவனத்தின் 24 ஊழியர்கள் பெற்றனர். சேலம் உருக்காலையைச் சேர்ந்த பி.சோமசுந்திரம், டி முருகேசன் உள்பட 6 பேருக்கு பி, சி ஆகிய பிரிவுகளில் விருது பெற்றனர்.

click me!