
திருவண்ணாமலை மாவட்டம், தண்டரை கிராமத்தில் கடந்த வாரம், 8 பேர் மர்மமாக இறந்தனர். இதனால், அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான வதந்திகளும் பரவியது.
இதையொட்டி மாவட்ட சுகாதார அதிகாரிகள், மேற்கண்ட கிராமத்தில் ஆய்வு செய்தனர். மேலும், சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், அவர்கள் விஷத்தன்மை கொண்ட உணவு, காலாவதியான உணவு போன்றவை சாப்பிட்டதால், அவர்கள் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து தண்டரை கிராமத்தில் பொது சுகாதாரத் துறை 2ம் கட்ட ஆய்வு நடத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன் மர்ம நோயினால் பாதிக்கப்பட்டு இறந்த ஒரு பெண்ணின் இறப்பு குறித்த அறிக்கை இன்று கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு மாதிரி குறித்த பரிசோதனை அறிக்கை அடுத்த 2 நாட்களில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.