போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 7ம் கட்ட ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை… எப்போது? உடன்பாடு எட்டப்படுமா?

Published : Aug 22, 2022, 11:53 PM IST
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 7ம் கட்ட ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை… எப்போது? உடன்பாடு எட்டப்படுமா?

சுருக்கம்

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 7-ம் கட்ட ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை, நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. 

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 7-ம் கட்ட ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை, நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இதுவரை 6 கட்டங்களாக நடைபெற்றுள்ளது. இறுதியாக கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிரடி திருப்பம் !

இந்த நிலையில் 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கான அழைப்பு தொழிற்சங்கத்தினருக்கு விடுக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் 14 ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 7 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நாளை  காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் 10 பேர் கைது... தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!!

இந்த பேச்சுவார்த்தையில் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தலா ஒரு பிரதிநிதிகள் தங்களது அடையாள அட்டையுடன் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமை வகிப்பார் என துறைசார்ந்த அலுவலர்கள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு எட்டப்படும் என தொழிற்சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நெல்லை டூ பழனி, பொள்ளாச்சிக்கு புது ரயில் வந்தாச்சு.. பயணிகள் குஷி! அட்டவணை என்ன?
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர்.. திருச்சியில் பிரதமர் மோடி சூளுரை..