தமிழ்நாடு முழுவதும் 76 டிஎஸ்பிக்கள் அதிரடி இடமாற்றம் - யார் யார் தெரியுமா ?

Published : Aug 07, 2022, 07:36 PM IST
தமிழ்நாடு முழுவதும் 76 டிஎஸ்பிக்கள் அதிரடி இடமாற்றம் - யார் யார் தெரியுமா ?

சுருக்கம்

தமிழ்நாடு முழுவதும் 76 டிஎஸ்பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது   காவல்துறையில் 76 டிஎஸ்பிகளை இடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தாம்பரம் காவல் ஆணையராக பணியாற்றிய ரவி நோய்வு பெற்றதை அடுத்து, ஆவடி காவல் ஆணையரே கூடுதல் பொறுப்பாக  தாம்பரம் சரகத்தையும் கண்காணித்து வந்தார்.  இந்நிலையில் தற்போது  மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..அதிமுக ஆபீசுக்கு வரும் சசிகலா.. அடுத்து என்ன நடக்குமோ? பதற்றத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் !

சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக ரித்து  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  ஆருத்ரா கோல்ட் டிரேடிங் வழக்கு தொடர்பான பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டு , பின்னர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மூன்று டி.எஸ்பிக்களான  கண்ணன் - மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படை  உதவி கமாண்டண்ட் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..கொடூரம் ! காதலித்த மகளுக்கு விஷ ஊசி போட்ட தந்தை.. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

சம்பத் -  ராமநாதபுரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சுரேஷ் -  ராமநாதபுரம் சரகர் போலீஸ் பயிற்சி மையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  மொத்தமாக தமிழக காவல்துறையில்  76 டிஎஸ்பிக்களை அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளர்.  இந்த பணியிடமாற்றம் செய்யப்பட்ட  டிஎஸ்பிகளில்  பெரும்பாலானோர்  காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.  ஒரே நேரத்தில் 76 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்