முக்கிய துறைகளை சேர்ந்த 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி..!

Published : Jan 21, 2024, 08:42 AM IST
முக்கிய துறைகளை சேர்ந்த 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி..!

சுருக்கம்

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் முக்கிய துறைகளை சேர்ந்த 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில்;- 

* வேளாண் துறை ஆணையராக இருந்த எல்.சுப்பிரமணியன் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* மாற்று திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஸ்ரீ  முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.  

* நில நிர்வாகத்துறை ஆணையர் எஸ்.நாகராஜன் மாற்று திறனாளிகள் நலத்துறை செயலாளராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* மீன்வளத்துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி நில நிர்வாகத்துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* சமூக நலத்துறை முதன்மை செயலாளராக இருந்த  சுஞ்சோங்கம் ஜாதக் சிரு மீன்வளத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 

* தமிழ்வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக இருந்த செல்வராஜ், சாலை வழி திட்டம் 2-ன் திட்ட இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காரில் திமுக கொடியுடன்.. ஃபுல் மப்பில் போயி யாரையாவது சாக அடிக்கவா? இப்படி பேசிட்டு கேஸ் போடாத போலீஸ்
எடப்பாடி பழனிசாமிக்கு மொத்த அதிகாரத்தையும் தூக்கி கொடுத்த பொதுக்குழு உறுப்பினர்கள்.. இபிஎஸ் எடுப்பது தான் முடிவு..!