
திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் சூப்பர் மார்க்கெட் கட்டட்ம் ஒன்று உள்ளது. அந்த கட்டடத்தின் மாடி பகுதியில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை காரணமாக மூடி இருந்தது.
இன்று வழக்கம் போல் வங்கியை திறக்க முயன்றபோது பூட்டு திறந்தே இருந்ததது.இதனால் அதிர்ச்சி அடைந்த மேனேஜர், பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் மற்றும் அறைகளை சென்று பார்த்த போது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைககள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் என்ன பிரச்சனை என்றால், வங்கியின் பூட்டுக்கள் உடைக்கப்படவில்லை, சுவற்றில் ஓட்டை எதுவும் போடப்படவில்லை. ஆனால் லாக்கர்ல் இருந்த நகை மட்டும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதனால் வங்கியில் பணி புரியும் ஊழியர்கள் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டிருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பூட்டை உடைக்காம, சுவரில் ஓட்டை போடாம புதுமையான திருடர்கள் யார் என போலீசார் குழம்பிப் போயுள்ளனர்