மாவட்ட நூலக அலுவலர் தலைமையில் சிவகங்கையில் 50-வது தேசிய நூலக வார விழா...

 
Published : Nov 20, 2017, 08:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
மாவட்ட நூலக அலுவலர்  தலைமையில் சிவகங்கையில் 50-வது தேசிய நூலக வார விழா...

சுருக்கம்

50th National Library Week Celebration at Sivaganga headed by District Library Officer ...

சிவகங்கை

சிவகங்கையில் உள்ள கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட  மைய நூலகத்தில் மாவட்ட நூலக அலுவலர்  தலைமையில் 50-வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தின் அலுவலகக் கூட்டரங்கில் 50-வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் தேவகி தலைமை தாங்கினார். வாசகர் வட்டத் தலைவர் அன்புத்துரை முன்னிலை வகித்தார். ஆக்ஸ்வர்ட்  பள்ளியின் தாளாளர் சியமளா வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினார்.

ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் அனந்தராமன், ஆசிரியர்கள் மருதுபாண்டியன், தெய்வேந்திரன் ஆகியோர் நூல்கள் குறித்துப் பேசினர்.

முனைவர் தேனப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நூல்களின் தன்மை குறித்தும், அவற்றை படிப்பதானல் ஏற்படும் பலன்கள் குறித்தும் பேசினார்.

இந்த விழாவை முன்னிட்டு நடைபெற்றப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு